நாட்டில் எரிபொருளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பண்டிகைக் காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
பண்டிகைக்கால தேவையை கருத்தில்கொண்டு, எரிபொருள் கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்காக போதுமான அளவு கையிருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, 92 ஒக்டேன் பெற்றோல் 30,000 மெட்ரிக் தொன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் 5,200 மெட்ரிக் தொன் கொண்ட கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
எரிபொருள் இறக்கும் நடவடிக்கை
மேலும், 35,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட மற்றொரு கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அச்சமின்றி வழமையான முறையிலும் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam