லண்டனில் இலங்கையர் ஒருவர் படுகொலை! - பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
கிழக்கு லண்டன் பகுதியில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் LGBT சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரோய் என்று அழைக்கப்படும் ரஞ்சித் கங்கனமலகே என்ற 50 வயதான இலங்கையர் ஆகஸ்ட் 16ம் திகதி காலை 6.30 மணியளவில் டவர் டவர் ஹேம்லெட்ஸ் பகுதியில் உள்ள கல்லறை பூங்கா ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பல வருடங்களாக டவர் ஹேம்லெட்ஸ் பகுதியில் வசித்து வந்த கங்கனமலகே தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெருநகர காவல்துறையினர் ஆகஸ்ட் 15ம் திகதி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பூங்காவைச் சுற்றியிருந்தவர்களிடம் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புலனாய்வு மேற்பார்வையாளர் பீட் வாலிஸ், நிறுவன காவல்துறையினர் LGBT சமூகத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
“ரோய் வாழத் தேர்ந்தெடுத்த சமூகத்தைப் புரிந்துகொள்ள நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் LGBT சமூகம் உட்பட பல்வேறு ஆலோசனைக் குழுக்களை நாங்கள் அணுகுகிறோம்.
அதனால் அந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள கற்றுக்கொள்கிறோம், அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படவும், நம்பிக்கை பெறவும் முடியும்." என குறிப்பிட்டுள்ளார்.
"பூங்காவில் உயிரிழந்த நபரை பார்த்த சாட்சிகளை அடையாளம் காண நாங்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அவருடைய புகைப்படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்” எனவும் பீட் வாலிஸ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த எவரும் 0208 345 3865, 101 அல்லது 1277/16 ஐ மேற்கோள்காட்டி @MetCC ஐ டுவீட் செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி...
லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்