லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்
கிழக்கு லண்டனில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரோய் என்று அழைக்கப்படும் ரஞ்சித் ககனமலகே என்ற 50 வயதுடைய நபர், மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காயமடைந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்தாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் பல வருடங்களாக டவர் ஹேம்லெட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை, டவர் ஹேம்லெட்ஸ் பகுதியில் உள்ள கல்லறையில் நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்படுவதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தையடுத்த லண்டனில் வாழும் பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
லண்டனில் வாழும் மக்கள் இரவில் உரத்த இசையைக் கேட்பதைத் தவிர்க்குமாறு லண்டன் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் முடிந்தவரை மங்கலான வெளிச்சம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மரணத்தை அடுத்து அந்த பகுதியில் குறிப்பாக இரவில், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்களை அவதானித்தால் உடனடியாக தகவல் வழங்குமாறு அந்த பகுதியில் வாழும் பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்திருப்பதன் மூலமும், உரத்த இசை கேட்பதைத் தவிர்ப்பதன் மூலமும், முடிந்தவரை மங்கலான வெளிச்சம் உள்ள பகுதிகளைத் தவிர்ப்பதன் மூலமும் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆபத்தான சம்பவங்கள் இடம்பெற்றால் அந்த பகுதிகளில் இருந்து வரும் சத்தத்திற்கு காது கொடுப்பதற்கேனும் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரம் தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.