பாதுகாப்பு அதிகாரியை கொலை! கொள்ளையடிக்கப்பட்ட சொகுசு வான்
புத்தளம் - வென்னப்புவ, உல்திவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரியைக் கொன்று, வீட்டிலிருந்து 26 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு வானை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபர் மாரவில, முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய கிருஷாந்த பெரேரா என பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வீட்டின் உரிமையாளர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், இறந்தவர் அங்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் உரிமையாளரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்ய வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
