வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடர்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
மணல் கொள்ளை
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மணல் கொள்ளை இடம்பெற்று வருகின்றது. முன்னர் மணல் திட்டாக இருக்கும் பகுதிகளில் இருந்து மணல் எடுத்து செல்லப்பட்டது.

தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் அமைப்பதனால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மணல் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு மணல் கொள்ளை தொடர்ந்தால் தொடர்ந்தால் இக் கிராமப் பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam