இறம்பொட கோர விபத்து - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடிய பல்கலைக்கழக மாணவி
இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொட பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் குழந்தையை காப்பாற்றி போராடிய தாய், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
பேருந்தில் சிக்கிய ஆறு மாத குழந்தை
இந்நிலையில் குறித்த பேருந்தில் மற்றுமொரு ஆறு மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடிய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மாணவி ஒருவர், பேருந்தில் சிக்கிய ஆறு மாத குழந்தையை, மக்கள் மீட்க வரும் வரை, தனது ஒற்றை கையால் தாங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
பதுளை, ஹிந்தகொடவைச் சேர்ந்த நிஷானி நாமல் ரத்நாயக்க என்ற பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவியே இந்த செயலை செய்துள்ளார்.
குறித்த மாணவி தனது 2ஆம் ஆண்டு தேர்வுகளுக்காக பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்திற்கு முகம் கொடுள்ளார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பேருந்து கவிழ்ந்தது..
அந்தக் கொடூரமான சம்பவம் தொடர்பில் நிஷானி தெரிவிக்கையில்,
“நான் பேருந்தின் நடுவில் அமர்ந்திருந்தேன். திடீரென்று, பேருந்து சாய்ந்து கவிழ்ந்து ஓடத் தொடங்கியது. சுமார் இரண்டு சுற்றுகளுக்குப் பிறகு, நான் தூக்கி எறியப்பட்டேன்.
நான் இடையில் சிக்கிக்கொண்டேன். என் தலையில் காயம் ஏற்படும் என பயந்து, என் தலையைக் கீழே திருப்பினேன். பேருந்து கவிழ்ந்து நின்ற பிறகு, நான் எழுந்திருக்க முயற்சித்தேன். என்னால் கையை உயர்த்த முடியவில்லை.
என் வலது கை ஆடுவது போல் உணர்ந்தேன். நான் என் இடது கையின் உதவியுடன் ஒரு இடத்தை பிடித்து நின்றேன். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் ஒரு சிறு குழந்தையை சுமந்து கொண்டு வந்தார். அந்தக் குழந்தைக்கு உரிமையாளர் இல்லை.
இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். என்னால் கைகளை அசைக்க முடியவில்லை. நான் தரையில் அமர்ந்தேன். குழந்தையைத் தாங்கிய நபர் குழந்தையை என் மடியில் வைத்தார். நான் என் இடது கையால் குழந்தையை அணைத்துக் கொண்டேன். வெளிச்சம் படிப்படியாக வந்தது.
கைகளில் ஏந்திக் கொண்டேன்..
குழந்தையை வலியால் அழ விடாமல் என் கைகளில் ஏந்திக் கொண்டேன். நுவரெலியாவில் குளிராக இருந்தாலும், என் அரவணைப்பிற்காக அந்தக் குழந்தை என்னை அணைத்துக் கொண்டது.
நான் சுமார் 45 நிமிடங்கள் அப்படியே ஒரு கையால் குழந்தையை தாங்கிக்கொண்டேன். ஒரு சந்தர்ப்பத்திலும் கீழே விடவில்லை. உள்ளூர்வாசிகள் வந்து எங்களை வீதிக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையும் நானும் கொத்மலை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டோம்.
இந்தக் குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்குமாறு கூறினேன். அவர்கள் குழந்தையை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் நானும் இன்னும் சிலரும் ஆம்புலன்ஸ் மூலம் கம்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்” என அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இந்த குழந்தை அந்த மாணவியின் குழந்தை என நினைத்தனர். வலியால் துடித்துக் கொண்டிருந்த மாணவி குழந்தையின் உயிரை காப்பாற்றும் வரை போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
அந்த குழந்தை யாருடையதாக இருந்தாலும் அதனை காப்பாற்ற போராடிய அந்த போராட்டத்திற்கு பிரதமர் மாணவியை பாராட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
