தென்னிலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்! - காரணம் வெளியானது
தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதில் உயிரிழந்தவரின் மனைவியினது சகோதரர் ஆபத்தான நிலையில் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சதுரங்க தில்ஷான் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 15 பேரை அடையாளம் கண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மற்றும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.