இந்தியாவில் பாரிய முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மென்பானங்கள் உள்ளிட்ட பான வகைகளுக்கான அலுமினியம் கான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
440 கோடி இந்திய ரூபாய் முதலீடு
இந்த தொழிற்சாலை சுமார் 440 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட உள்ளதாகவும், சுமார் 26 ஏக்கர்களில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இலங்கையில் ஹொரண பகுதியில் இயங்கி வரும் சிலோன் பிவரேஜஸ் கம்பெனி நிறுவனத்தினால் தற்பொழுது 8 அளவுகளில் அலுமினியம் கேன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த மே மாதம் சிலோன் பிவரேிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மென்பான உற்பத்தியொன்றை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |