திருகோணமலையில் இடிந்து விழுந்த பல்நோக்கு கட்டடம்
திருகோணமலை- வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடம் கன மழையினால் இடிந்து, விழுந்து சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவமானது நேற்று (26) சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி, முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய பகுதியும் எந்த நேரமும் விடிந்து விடக்கூடிய, ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முழுமையாக பாதிப்பு
கட்டடத்தின் மீதி பகுதியும் ஆபத்தான நிலையில் இருப்பதால், எவரும் இந்தக் கட்டடத்துக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச மாதர் அபிவிருத்தி நிலையம், குடிசை கைத்தொழில் பயிற்சி நிலையம், பிரதேச கடற்றொழில் சங்க அலுவலகம் ஆகியன இயங்கி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
