முடிக்கப்படாத முள்ளியவளை - வற்றாப்பளை வீதி புனரமைப்பு பணிகள்: மக்கள் விசனம் (Photos)
முள்ளியவளையையும், வற்றாப்பளையையும் இணைக்கும் பிரதான வீதியின் அபிவிருத்தி பணி வெவ்வேறு காலங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முள்ளியவளை சந்தியம்மன் கோவிலிலிருந்து வற்றாப்பளை சந்திவரை நீண்டு செல்கின்ற வீதி தான் முள்ளியவளை - வற்றாப்பளை வீதி என இங்கே குறிப்பிடப்படுகின்றது.
சந்தியம்மன் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை சந்தி நோக்கிய திசையில் அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இறுதிக்கட்ட அபிவிருத்தி பணிகள்
வீதியின் வற்றாப்பளை சந்தியில் இருந்து முள்ளியவளை நோக்கிய திசையில் 3.5 km தூரத்தினை புனரமைப்பதற்கான பணிகள் இரு வேறு ஒப்பந்ததாரர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் இந்த செயற்பாட்டினை முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி திணைக்களம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புனரமைப்புக்கான நிதியின் ஒரு பகுதி வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் இருந்து பெறப்பட்டுள்ளது. மற்றைய பகுதி நிதி PSDC நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றது.
தாமதமடைந்த புனரமைப்பு பணிகள்
திட்டமிடல் அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் 25.07.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. திட்டம் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்ட காலம் 16.10.2023 வரையானதாகும்.
எதிர்பார்க்கப்பட்ட காலம் கடந்த போதும் வேலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. பாலம் ஒன்றும் மிதவைத்தட்டு பாலம் இரண்டும் முடிக்கப்படவில்லை. வீதியின் இடையிடையே தொடங்கப்பட்ட வேலைகள் முடிக்கப்படாதும் இருக்கின்றன.
பொதுமக்கள் விசனம்
புனரமைப்பு பணிகள் விரைவாக முடிக்கப்படாமையினால் தாம் பெரிதும் இடர்பாடுகளை சந்திப்பதாக மக்கள் விசனப்பட்டுக் கொண்டமையை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை “வீதியபிவிருத்தி பணிகள் தொடங்கும் முன்னர் நல்ல வியாபாரம் நடைபெற்று வந்த போதும் இப்போது வியாபாரம் மிகக் குறைவாக இருக்கிறது.
மாதம் பத்தாயிரம் ரூபாவுக்கும் வியாபாரம் நடைபெறாத போது எப்படி தங்கள் குடும்பத்தை கொண்டு செல்வது. சின்னப் பிள்ளைகளின் செலவுகளை ஈடு செய்ய முடியாது இருக்கிறது.
வீதியின் பணிகள் முடிக்கப்படாததால் பயணிகள் கடைக்கு எதிர்ப்பக்கமாக வீதியின் ஓரத்தின் வழியே பயணிக்கின்றனர்.
இதனால் கடைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைகிறது” என பலசரக்கு கடையொன்றை நடத்தி வருபவர் குறிப்பிட்டார்.
மழை தொடங்கி இடையிடையே பொழிவதால் தற்காலிக வீதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்து விடுகிறது என கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
இத்தகைய கருத்துக்களையே பல பொதுமக்களுடையதாகவும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
ஏன் தமதமாகின்றது?
இந்த நிலையில் “வற்றாப்பளை சந்தியில் இருந்து முள்ளியவளை நோக்கிய வீதியில் குறித்த தூரத்திற்கு இருபக்கங்களும் இரு வேறுபட்ட தரையமைப்பைக் கொண்டுள்ளன.
ஒரு பக்கம் மேடாகவும் மற்றைய பக்கம் தாழ்வாகவும் இருக்கின்றன.வீதியமைப்பின் போது நீரோட்டம் கருத்திலெடுக்கப்பட்டு திட்டத்திற்கான நிதியளவினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலில் அதிருப்தியினை பொதுமக்கள் வெளியிட்டமையினால் அதனை சீர்செய்து கொள்வதற்காக ஒரு மாதகாலம் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அதனால் திட்ட செயற்பாட்டாளர்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் ஒரு மாதத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டு வாரங்களில் செயற்பாடுகள் நிறைவடைந்துவிடும்” என இந்த வீதியபிவிருத்தி தொடர்பாக பேசவல்ல அதிகாரி விளக்கமளித்திருந்தார்.
மழையினால் ஏற்படும் கட்டுமானப்பணி தாமதங்களையும் இங்கே கருத்திலெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுமானத்தின் தரம்
முள்ளியவளை - வற்றாப்பளை வீதியின் கட்டுமானம் தொடர்பில் வற்றாப்பளையில் வதியும் கட்டடங்கள் தொழிநுட்பவியலாளர் (TO) ஒருவரிடம் கருத்துக் கேட்ட போது கட்டுமானத் தரம் உயர்வாக பேணப்படுவதில் அவர்கள் கவனமெடுத்திருப்பதோடு புனரமைப்புப் பணிகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பொது புனரமைப்புப் பணிகள் பல காரணிகளால் தமதமடையலாம். எனினும் இதனை பொதுமக்கள் புரிந்து கொள்வதில்லை.
அதிகமான சந்தர்ப்பங்களில் தாமதத்திற்கு பொதுமக்களே காரணமாகின்றனர் என குறிப்பிட்டதோடு வற்றாப்பளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு அபிவிருத்தி பணியின் தாமதம் பற்றியும் எடுத்துக்காட்டி விளக்கியிருந்தார்.
தாமதமானாலும் தரமான வேலைகளாக அவை முடிக்கப்படல் வேண்டும். அதுவே நீண்ட கால
நோக்கில் பயனுடையதாக இருக்கும் என மேலும் குறிப்பிட்டார்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
