இலங்கையின் முழு கல்வி முறையிலும் மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அடுத்த வருடத்திற்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.
அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையை பின்பற்ற வேண்டும். கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
