தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு - கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது உயிர் நீத்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு, கூட்டுப்பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண அமெரிக்க மிசனின் குரு முதல்வர் அருட்தந்தை லூத் ஆகியோரினால் இந்த கூட்டுப்பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி
முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்
கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


















16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
