நாடாளுமன்றதில் முள்ளிவாய்க்கால் நிகழ்வைக் காட்டிக் கொடுத்த த.தே.கூட்டமைப்பின் பிரபலம் யார்?

Memorial Parliament Jaffna Mullivaykal Tamil National Allaince
By Dias May 21, 2021 04:46 PM GMT
Report

கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுநாளை நாடாளுமன்ற அமர்வுத் தளத்தில் அனுஷ்டிப்பதற்கு இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. காரணம் அதில் இந்நிகழ்வு இடம்பெற்றால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்பது ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் அங்கு நினைவேந்தலை மேற்கொண்டால் சிங்கள மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிழையாக நினைத்து விடுவார்கள், அவர்றை தவிர்ப்போம் என தொடக்கத்திலிருந்து கூறிவந்த, சட்டம் தெரிந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கதையை ஏற்பாட்டாளர்கள் ஏற்க மறுத்ததால் இரகசியமான முறையில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி சென்ற போது அந்த இடத்தில் விளக்கேற்றுவதற்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதுடன், முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அவதானித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இவர்களின் செயற்பாடுகளால் ஆத்திரமுற்று இது தொடர்பில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி செலுத்துகின்ற விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர யாருக்கும் தெரியாது என கூறப்படுகிறது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது நாடாளுமன்ற உள்ளக அலுவல்களுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய படைக்கல சோவியத் திடீரென அவர்களை நோக்கி வந்து நீங்கள் இவ்விடத்தில் மெழுகுவர்த்தி கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

இந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், இவர்கள் இருவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நாடாளுமன்றில் அனுஷ்டிப்பதில் உடன்பாடு இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழக்கப்பட்ட மூடப்பட்ட அறையிலே எமது அஞ்சலிகளை செலுத்தினோம் என கடந்த தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஒன்றாக பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தனது ஆதரவாளர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஒருவர் சாணக்கியதனமாக வெளிப்பூச்சிற்கு தமிழ்த் தேசியத்தை கையிலெடுத்து சிங்கள தேசத்துடன் உறவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி தமிழ் மக்களின் உயிர்த்தியாகம் நிறைந்த போராட்டத்திற்கு அண்மைக்காலமாக களங்கம் ஏற்படுத்துவதையும் எம்மால் அனுமதிக்க முடியாது என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன், பிரதமர் 12 வருடங்களின் பின் இத் தினத்தை நினைவு கூர்ந்ததை வரவேற்கிறேன், பொது மக்கள் இறந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்திருக்கலாம், இந்த நாளில் பொது மக்கள் இறந்ததை நாங்கள் நினைவு கூறுகிறோம், இதன்போது சபாநாயகர் இடை மறித்து இந்த விடயம் இப்போது கூற வேண்டிய விடயம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். 

சபாநாயகர் இடைமறித்த பின் சுமந்திரன் தனது உரையில் நாங்கள் இறந்த படையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என மே 18ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகமெங்கும் மிகுந்த பொலிஸ் மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, தமிழர் தரப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளும் இன்றைய நாளில் அவர் அவ்வாறு பேசியுள்ளமை பெரிதும் பேசு பொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், கலையரசன், சுமந்திரன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மே 18இல் இறந்த படையினருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன் 
GalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US