யாழ். மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் யாழ். மாநகரசபையிலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் - 19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்றைய தினம் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உட்பட பல மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின் கருத்து தெரிவித்த முதல்வர், உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும்.
நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
