முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்ப்பால் தான்
திருகோணமலை மாவிலாறு பகுதியிலயிருந்த தமிழ் மக்களுடைய பிரதேசங்களுக்கு இலங்கை அரசு பொருளாதார தடை விதித்தது.
இதனால் எந்தவொரு அடிப்படை வசதியுமே இல்லாமல் பாரபட்சப்படுத்தி பார்க்கப்பட்டிருந்த மக்கள் மாவிலாறு அணைய மூடினார்கள். இதனை சாக்காக வைத்துக்கொண்டு நடைமுறையில் இருந்த சமாதான உடன்படிக்கைய கிழித்து நான்காம் கட்ட ஈழப்போரை தொடக்கியது இலங்கை அரசு.
இறுதியில் வன்னி கிழக்கு பகுதியில் மிக உறுதியாக இருந்த (இருட்டுமடு பகுதியில் அதி உக்கிரமான தாக்குதல்கள் நடக்கின்றது. இதன் போது தான் தடைசெய்யப்பட்ட chemical boms , cluster bombs,, posperas bombs, வல்லரசு நாடுகள் வழங்கிய அதி நவீன ஆயுதங்கள், பல்குழல் ஏவுகணைகள், படை உதவிகள், இந்திய அரசின் உதவிகள் என்று பலதும் சேர்ந்து எங்களை வீழ்த்தியது.
ஊழிக்காலம் ஒரு பவுணினுடைய விலை 1000 ரூபா. ஆனால் ஒரு கிலோ மீனின் விலை 2000 ரூபாவாகவிருந்தது. இரண்டு பவுண் குடுத்து ஒரு கிலோ மீன் வாங்க வேண்டிய நிலை இருந்தது.
இதை இப்போது இந்த காலத்தில் கணக்கிட்டால் ஒரு பவுண் ஒரு லச்சம் என்று வைப்போம். இரண்டு இலட்சம் கொடுத்து ஒரு கிலோ மீன் வாங்கிய காலமாக முள்ளிவாய்க்கால் இருந்திருக்கிறது.
எங்கையும் இருந்து எடுத்த கொஞ்சம் அரிசி, அங்க அங்க இருந்த ஊத்து தண்ணி, சிலவேளைகளில் பால் பக்கற்று கிடைத்தால் அதிலும் ஒரு கொஞ்சம் சேர்த்து தமிழர் புனர்வாழ்வு கழகம் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்தது. கஞ்சிக்காக காத்திருந்த மக்கள்? அந்தக் கஞ்சியை வாங்குவதற்கு காலையில் இருந்தே ஜனங்கள் வரிசையாக நிற்கும்.
கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை
கஞ்சி கிடைக்கும் முதல் செல் வந்து விழும். கஞ்சி வரிசைக்குள்ளும் செல் விழும். ஜனங்கள் காயப்படுவார்கள். குருதி தெறித்து கஞ்சிக்குள்ளும் விழும். ஆனால் காயப்பட்டவர்களை தூக்கிக்கொண்டு போனபின் வரிசையில் மறுபடியும் கூடி கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள்.
எதனை ஆயுதமாக வைத்து எம்மை அழித்தீர்களோ அதனையே எழுச்சி வடிவமாக கொண்டு புரட்சி செய்வோம் என்று. 2018ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக தமிழ் சிவில் சமூக அமையம்(TCSF).அறிமுகப்படுத்தியது. முள்ளிவாய்க்கால் கஞ்சியில் மாறாட்டம்? ஒரு உள்ளூராட்சி சபை உறுப்பினர் சொன்னார். நாங்கள் முதலில் கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை.
பாலை குறைத்துச் சேர்த்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அதை வழமையான கஞ்சி போல சமைத்தோம் என்று. முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு எவ்வாறு சுவை சேர்ப்பது எண்டு சர்வதேச ஊடகம் ஒன்றில் ஒரு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி இனப்படுகொலையின் அடையாளம்.
சுவையில்லாமல் இருப்பது தான் அதனுடைய அடையாளம். சிங்களவருக்கும் கஞ்சிக்கும்? கோட்டா கோ கம போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு இது இனப்படுகொலை கஞ்சி, தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள், அவர்களுக்காக பிரார்த்திப்போம் என்றெல்லாம் கூறி அந்த கஞ்சி பரிமாறப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில காய்ச்சப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மஞ்சள் சேர்க்கப்பட்டிருந்ததோடு , பால்சோறு போல ஆக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் அதற்கு என்று ஒரு சுவை உண்டு அதற்குள் ஆழமான வழிகளும் கதைகளும் உண்டு. அது இனப்படுகொலையின் வலியை உரத்துச்சொல்லும் தமிழர்களின் இன்னுமொரு உயிராயுதம் முள்ளிவாக்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்பால் தான். இதுதான் தீர்வு? இலங்கையில் , தமிழகத்தில் , கனேடிய நாடாளுமன்றத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என நிறுவியுள்ளது.
இனப்படுகொலைக்கு உள்ளான இனம் அவ் இனத்தின் உயிர்ப்புக்காக தம் உயிர்களை இழந்தவர்களை நினைவுகூர வேண்டும். அவர்களை ஆராதிக்க வேண்டும்.அதற்கு இளைய தலைமுறையிடம் ஞாபகங்களை கடத்த வேண்டும்.
எங்களில் முப்பது ஆண்டுகால யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதனை உணர்வு பூர்வமாக நினைவுகூருவர். இரண்டாம் தலைமுறை நேரம் கிடைக்கும் போது அதனை நினைவுகூருவர். மூன்றாம் தலைமுறை என்னவென்றே அறியாமல் போய்விடும்.
அதற்காக தான் இளைய தலைமுறையினருக்கு ஞாபகங்களை கடத்தும் செயற்பாடு பல்கலைக்கழக மாணவர்கள், முஸ்லிம் சமூகத்தினர், வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கட்சிகள், இன்னும் பல அமைப்புக்களும் சேர்ந்து இனப்படுகொலை புரிந்த இராணுவத்துக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியது.
கி. அலெக்ஷன்.
அரசறிவியற்துறை
யாழ்.பல்கலைக்கழகம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 19 May, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.