முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை
முள்ளிவாய்க்கால் (Mullivaikal) இறுதிப்போரில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களையும் நினைத்து அமைதியான முறையில் பிரார்த்தனை செய்யுமாறு அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், “இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களோ, அவர்களுக்கான சமய வழிபாடுகளோ நிறைவேற்ற முடியாத துயரத்தோடு உறவுகளை இழந்தவர்கள் வேதனையுறும் நிலையில் மனிதாபிமான பிரார்த்தனையை அனைவரும் செய்ய வேண்டியது தார்மீகக் கடமையாகும்.
அரசியல் விடயம்
எனவே, அனைத்து மக்களும் வேறுபாடின்றி ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். உருக்கமான வழிபாட்டை யாரும் குழப்பாதீர்கள். வழிபாட்டு நாளை அரசியல் விடயமாகக் கொள்ளாமல் அனைவரும் அமைதியாகப் பிரார்த்திக்க வேண்டும்.

சைவ மக்கள் பிதிர்களை நினைந்து வழிபாடு செய்யும் மரபுக்கமைய ஆலயங்களில் மோட்ச அர்ச்சனைகளைச் செய்து வழிபாடு செய்யுங்கள்.
உலகில் எவருக்கும் இத்தகைய அவலங்கள் ஏற்படக்கூடாது என அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam