இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவனின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவனின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வைகாசி மாதம் 18ஆம் திகதி உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்தநிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
நினைவுநாள் நிகழ்வு
திருப்பலியை தொடர்ந்து அகவணக்கம், அஞ்சலி உரை, ஈகைச்சுடர் ஏற்றல் என்பவற்றுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இந்நாளில் கொல்லப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களோடு ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களும் ஒருவராவார்.
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போராளிகளின் சரணடைதலுக்கு உதவியாக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் போராளிகளுடன் இணைத்து பேருந்து வண்டியில் கொண்டுசெல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri