முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தடைகளை எதிர்கொள்கிறோம்: மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்
15 வருடங்களாக மட்டக்களப்பில் (Batticaloa) மேற்கொள்ளப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பல்வேறுபட்ட தடைகள் உருவாவதாக மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் (V. Lavakumar) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான் கிராமத்தில் நேற்றைய தினம் (15.05.2024) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 15ஆவது ஆண்டை நாங்கள் கடந்து வருகின்றோம்.
பொலிஸாரின் நடவடிக்கைகள்
146,000இற்கு மேற்பட்ட பொதுமக்கள், அப்போது இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒருவேளை வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக கஞ்சி வாங்குவதற்காக நின்றபோது கொத்துக் குண்டுகளாலும், எறிகணைகளாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில், தொடர்ச்சியான 15 வருடங்களாக இந்நிகழ்வை நாம் மேற்கொள்கின்ற இக்காலங்களிலே பல்வேறுபட்ட தடைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே உருவாகுகின்றன.
இதற்கமைய, இவ்வருடமும், செவ்வாய்க்கிழமை பொலிஸாரின் கெடுபிடிகள் இருந்தன. புதன்கிழமையும் பொலிஸார் மிகவும் அச்சுறுத்துகின்ற விதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான கெடுபிடிகளையும் கடந்து எமது உணர்வுகளை எமது அடுத்த சந்த்தியினருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நோக்குடன் எமது மக்களின் இனப்படுகொலை தினத்தை நினைந்து கஞ்சி கொடுத்து மக்களுக்குப் பரிமாறியிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |