முள்ளிவாய்க்கால் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் மல்லுக்கட்டிய பொலிஸார்
முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் மல்லுக்கட்டலில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்றுள்ளது.
அதனைச் செய்தியாக்கச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மல்லுக்கட்டியதுடன், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு அச்சுறுத்தியிருந்தனர்.
இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாளட்டயை பொலிஸாருக்கு காண்பித்த நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும் என்றும் அனைவருக்கும் ஒரு நடைமுறையே என்றும் கடுமையாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும் இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் தகவல் திணைக்களம் ஆகியன ஊடகவியாலாளர்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களிலும் செய்தியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்தின் பின்னர்
ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
