வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Missing Persons Tamils Mannar Mullivaikal Remembrance Day
By Ashik May 13, 2025 01:36 PM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் குடும்பங்களுக்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது

கல்கிஸ்ஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது

கொடூர யுத்தம்

குறித்த சங்கத்தினர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு தாய்மாரும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழினமும் கொல்லப்பட்டு,அழிக்கப்பட்ட அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தமும்,சதையும் சிந்தப்பட்டு அந்த நாளை கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் நினைவு கூர்ந்து கஞ்சி காய்ச்சி வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Mullivaikkal Memorial Kanji In Mannar

இந்த கஞ்சி 16 வருடங்களுக்கு முன் ஒரு பிடி அரிசி கூட கிடைக்காமல் இருந்த அரிசியை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பும் இல்லாமல் அங்கிருந்த அமைப்புகள் குறித்த கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர். அதில் சிலருக்குத்தான் இந்த கஞ்சி கிடைத்தது.

வரிசையில் நின்று இந்த கஞ்சியை வாங்கி பசியை போக்குவோம் என்ற நேரத்தில் கூட கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.அந்த அரசாங்கத்தினால். கஞ்சிக்காக வரிசையில் நின்ற எத்தனையோ உறவுகள் கஞ்சி கிடைக்காமல் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.இன்று அதை மறக்கவும் முடியாது.மன்னிக்கவும் முடியாது.

எம் இனத்திற்கு நடந்த கொடூரத்தை உலக நாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.இன்று வரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த கஞ்சியை நாம் வழங்குவதற்கு காரணம் தற்கால இளைய சமூகத்திற்கு 16 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தெரியாது.

நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்

நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்

நீதி 

16 வருட கால இடைவெளியில் நிறைய நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அவை எல்லாம் எம் சமுதாயத்தின் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இன்று வரையும் இரத்தமும் சதையும் சிந்திக் கொண்டே இருக்கிறது.

அதனை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி ஒவ்வொரு இறந்த ஆத்மாக்காகவும் நினைவு கூற வேண்டும். அது தான் நாம் எம் இனத்திற்கு செய்கின்ற பரிகாரம்.

வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Mullivaikkal Memorial Kanji In Mannar

அதை தான் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாமும் நினைவு கூர்ந்து 16 வருடமாக அங்கே சென்று வந்து கஞ்சி காய்ச்சி நினைவு படுத்திக் கொண்டு வேதனைகளையும்,சோதனைகளையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு உள்ளங்களும் இன்று வீதியில் நின்று போராடிக் கொண்டு,எம் உறவுகள் மீண்டும் எம்மிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காவல் நிற்கின்றோம்.

எம் கண்ணீர் என்று துடைக்கப் படுமோ தெரியாது.ஆனால் கண்ணீர் சிந்திய எத்தனையோ உறவுகளின் கண்கள் மூடி விட்டன.அந்த மூடிய கண்களுக்கு இந்த சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றதோ தெரியாது.இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கிடையில் வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என சங்கத்தினர் மேலும் தெரிவித்தனர்.

வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US