கல்கிஸ்ஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது
கல்கிஸை கடற்கரை வீதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் மே 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
இருவர் கைது
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வீதி சுத்திகரிப்பு தொழிலாளியாக பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
தற்போது குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயதுடையவர் ஆவார்.
அத்துடன் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் காரரான படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வரும் சாண்டோவின் இரண்டு சகாக்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
