பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Sri Lankan Tamils Mannar Mullivaikal Remembrance Day Tamil diaspora
By Ashik May 18, 2026 05:51 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை (18) மன்னாரிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Memorial Day 2026 Mannar

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கல்முனையிலும் அனுஷ்டிப்பு

வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கல்முனையிலும் அனுஷ்டிப்பு

நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்படமாட்டாது 

கடந்த 70 ஆண்டுகளாக தன்மானம், சுயமரியாதை சமூக சம நீதி மறுக்கப்பட்ட சமூகமாக பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான போராட்ட வடிவங்களுடன் கால நீட்சி கரைந்து ஓடி எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட வாழ்வியல் சமத்துவ உரிமை மறுக்கப்பட்ட சமூகமாகவே தொடர்ந்து சிங்கள ஏகாதிபத்திய பௌத்த தேசியவாத மேட்டிமைவாதிகளால் நசுக்கப்படுகின்றோம் என்பதே மிகுந்த வேதனைக்குரிய விடயம்.


உலகளாவிய ரீதியிலே மனித உரிமைகள் உச்சம் தொட்டிருக்கும் போது பௌத்த பஞ்ச சீலத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்கின்றோம். எனும் மாய விம்பத்தை காட்டும் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழர்களை அடிமைகளாக நசுக்குகின்ற நாசகார வேளையிலே ஈடுபடுகிறார்கள்.

பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Memorial Day 2026 Mannar

காலத்துக்கு காலம் கட்சிகள் மாறி ஆட்சிகள் மாறுகின்ற போதும் கூட பௌத்த தேசிய வாதத்தின் மனோநிலை என்பது மாறவே இல்லை . பல நாடுகளின் கூட்டு சதியால் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் கூட காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 ஆகும்.

இவை அரசின் புள்ளி விபரங்களில் காட்டுகின்ற எண்ணிக்கை.இவர்கள் எங்கே என்கிற கேள்விக்கு இதுவரை சர்வதேச சமூகமும் பதிலளிக்கவில்லை.ஏனெனில் அவர்களும் இந்த இனப்படுகொலையின் பங்குதாரர்களே.

கால நீட்சி சாட்சியங்களும், ஆதாரங்களும் காலாவதியாகி கொண்டே போகிறது. நீதி மறுக்கப்பட்டு சுயமரியாதை இழந்த சமூகக் கட்டமைப்பின் இரண்டாம் தர பிரஜைகளாக இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விரும்புகிறதா? என்கின்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எழுகிறது.

கொலைகாரர்களிடமும் கொலைகாரர்களின் பங்குதாரர்களிடமும் நீதியின் நிழலைக்கூட பெற முடியாது. இந்த உலகம் கசாப்புக் கடை முதலாளிகளின் கூடாரமாக காணப்படுகிறது.

தமிழ்க்கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் உள்ளூரில் சில அமைப்புகளும் இனப்படுகொலையை மூலதனம் ஆக்கிக்கொண்டார்களே தவிர கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறையில் எந்த முன்னெடுப்புகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

தோற்றுப்போகும் தமிழினம்

இனப்படுகொலைக்கு சாட்சியமாக ஒழுங்கு முறையாக ஒரு நினைவேந்தல் தூபி கூட நிறுவப்படவில்லை. அதை நிறுவுவதற்கு நினைவேந்தல் குழு கூட ஒழுங்காக அமைக்கப்படவில்லை. இப்படி சகல விடயங்களிலும் தோற்றுப்போகும் ஒரு இனமாக தமிழினம் கடந்த 17 ஆண்டுகளாக தோல்வி மனநிலையில் இருந்து கொண்டும், இயலாமையில் இருந்து கொண்டும் மற்றவர்களை எதிர்பார்த்து தங்கி வாழும் மனோ நிலையில் இருப்பது தான் தமிழினத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.

பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Memorial Day 2026 Mannar

நீதி என்பது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சமூக நீதி அதிகாரத்தின் பக்கம் தான் தலை சாய்கிறது என்பது பாதிக்கப்பட்ட சமூகத்தின் விசனமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் யார் யாரையோ எல்லாம் நம்புகிற காலச்சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியான இனப்படுகொலையை அரசியல் கட்சிகள் வாக்குக்காக நோக்குவதே இனப்படுகொலைக்கான நீதி இன்னும் நீர்க்குமிழி ஆகவே தொக்கி நிற்கிறது மீட்பருக்காக காத்திருக்கிறது இந்த தேசம்.

பாதிக்கப்பட்ட மக்களுடைய உணர்வை இதுவரை எவரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அந்த மக்களின் கண்ணீரும் வற்றிப்போய்விட்டதே தவிர நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்படமாட்டாது என்பதே பட்டறிவு அனுபவமாக காணப்படுகிறது. உலகம் அநீதியாளர்களின் நண்பராகவே காணப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE

தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US