திருகோணமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் (VIDEO)
மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் ஆலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது திருகோணமலை தமிழர் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலாவது ஈகைச்சுடர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவரின் உறவினரால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக அபிவிருத்தி கட்சியின் தலைவர் குகதாசன் பிரகாஷ் மற்றும் இளைஞர் அணியின் தலைவர் கமல் திலீப்,சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


    
    
    
    
    
    
    
    
    
    கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
    
    தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri