5ஆவது நாளாக பயணத்தை தொடரும் முள்ளிவாய்க்கால் ஊர்தி நல்லூர் நோக்கி நகர்வு (video)
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனி ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் பயணித்துள்ளது.
ஊர்திபவனி யாழ். நகரில் தரித்திருந்தபோது பொதுமக்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி ஐந்தாவது நாளாக கொக்குவில் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பவனி பயணம் நேற்று (15.05.2023) மன்னாரில் இருந்து மாங்குளம் ஊடாக வவுனியா முழுவதும் மக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக சென்றுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இதனை தொடர்ந்து 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கம்.
இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: ஆஷிக்
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் ஊர்தியின் ஐந்தாவது நாள் பயணம் இன்று காலை கொக்குவில் பகுதியில் ஆரம்பமானது அதனை தொடர்ந்து மருதனார்மடம் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இன்றைய நாள்(16.05.2023) முழுவதும் புலனாய்வாளர்கள் சிலர்
பின்தொடர்ந்து வந்ததோடு ஊர்தி செல்லும் இடங்களில் அதிகளவான புலனாய்வாளர்கள்
வருகை தந்து புகைப்படங்கள் எததோடு கண்காணிப்பு நடவடிக்கைகளையும்
முன்னெடுத்துள்ளனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam