கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Video)
கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறும் சுடரானது கொழும்பில் ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட, காலிமுகத்திடல் போராட்டத்தின் முண்ணனி செயற்பாட்டளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18.05.2023) உணர்வு பூர்வமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வெள்ளை மலர்
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |