மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (photos)
''முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்'' எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சி கிரான் கிளை தலைவர் சி. சண்முகநாதன் ஏற்பாட்டில் இன்று (18.05.2023) இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆலய குரு, கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிர்நீத்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் கஞ்சும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மட்டக்களப்பு மன்றேசா தியான வளாகத்திலும் இன்று (18.05.2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குறித்த நினைவேந்தலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கஞ்சி வழங்கல்
இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், மற்றும், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சும் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ருஷாத்












