முள்ளிவாய்க்காலின் இறுதி தருணங்கள்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்(Video)
மெல்ல மெல்ல பல தடவைகள் இடம்பெயர்ந்து தெருத்தெருவாய் ஓடி ஓடி முள்ளிவாய்க்கால் வரைக்கும் 2009 இல் வந்து சேர்ந்தோம் என முன்னாள் பெண் போராளியான மங்கயற்கரசு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதி தருணங்களில் ஏற்பட்ட பல அதிர்ச்சியான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நான் 1989 ஆம் ஆண்டு தமிழீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன் வன்னியில்தான் தொடர்ந்து 20 வருடங்கள் இருந்தேன். இறுதி யுத்தம் ஆரம்பித்தபோது நாங்கள் புதுக்குடியிருப்பில் இருந்தோம்.
அப்போது வீதிகளிலே பல உயிர்களை இழந்தோம், இந்நிலையில் என்னோடு இருந்து படித்து வந்த எனது அக்காவின் மகளான என்னுடைய 19 வயதுடைய பெறாமகளையும் இழந்தேன்.
எனது கணவரும் முன்னாள் போராளிதான் நாங்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டது போல் முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்தோம். எனது கணவரின் முன்னெடுப்பில்தான் அப்போது எமது மூட்டை முடிச்சுக்களிலிருந்த அரிசியை எடுத்து கஞ்சி காய்சி வழங்கினோம்.”என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்,