நாங்கள் இனவாதிகள் அல்ல! தொடர்ச்சியாக சர்வதேசத்திற்கு கூறுகிறோம் - தமிழ் மக்களின் ஆதங்கம் (Video)
தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (18.05.2023) தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
இறுதிப் போரின் சுவடுகளைத் தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெறும் இந்த நிகழ்வின் தமது உறவுகளை இழந்து தவிக்கும் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.
அத்தகைய மாறா வடுக்களில் இருந்து மக்கள் இன்றும் விடுபடவில்லை என்பதற்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு பறைசாற்றுகிறது என்றால் அது மிகையில்லை.
அந்த வகையில், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும், மனித கொலை குறித்தும் தற்போது மக்களின் மனங்களில் உதிரும் துக்கத்தினையும், அவர்களின் மனக் குமுறல்களையும் இத்தருணத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் தலையீடுகளை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் இதன்போது கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |