கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டினால் முள்ளிவாய்க்கால் (Mullivaikal) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாளான இன்று (18..05.2024) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமை தாங்கியுள்ளார்.
ஆத்மசாந்தி பிரார்த்தனை
இதன்போது, பொது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்த மக்களிற்கு ஆத்மசாந்தி பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சமத்துவக்கட்சி
அதேவேளை, சமத்துவக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பொதுச்சுடரும், ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி : தமிழ்செல்வன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |