மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று (18) அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகள்
இவ்வாறு ஒன்று திரண்ட மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட் மக்களுக்கு நீதிவேண்டும் எனகோரி வெள்ளை கொடிகள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கு அமைக்கப்பட்ட நினைவேந்தல் பகுதியில் ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரிடம் 8 கோரிக்கைகள் அடங்கிய மனு ஓன்றை கையளித்துள்ளதுடன் அங்கிருந்த அனைத்து பொதுமக்களுக்கும் கஞ்சி பரிமாற்றப்பட்டது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
