முல்லைத்தீவு வைத்தியசாலை இயந்திரம் விவகாரம் வதந்தியே! உறுதிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்

Mullaitivu Selvam Adaikalanathan Sri Lanka Politician Sri Lankan political crisis Hospitals in Sri Lanka
By Shan Oct 04, 2023 03:09 PM GMT
Report

முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் எண்டோஸ்கோபி (Endoskopie) இயந்திரத்தினை அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுவது வதந்தியாகவே பரப்பப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (04.10.2023) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வீ.சண்முகராஜாவை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முடங்கவுள்ள தொடருந்து சேவைகள்: பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு

முடங்கவுள்ள தொடருந்து சேவைகள்: பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு

எண்டோஸ்கோபி (Endoskopie) இயந்திரம்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் எண்டோஸ்கோபி (Endoskopie) இயந்திரத்தினை அனுராதபுர வைத்தியசாலைக்கு காெண்டு செல்ல அனுராதபுர வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முல்லைத்தீவு வைத்தியசாலை இயந்திரம் விவகாரம் வதந்தியே! உறுதிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் | Mullithivu Hospital Endokopie Machine Issue

இவ்விடயம் சம்பந்தமாக தெளிவினை பெற்று கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வீ.சண்முகராஜாவை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அனுராதபுர வைத்தியசாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுதடைந்ததனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இயந்திரத்தினை முல்லைத்தீவிலிருந்து அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

நேரடியாக வைத்தியசாலை

இந்நிலையிலையே அதனை அறியும் விதமாக குறித்த சந்திப்பு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்க்கது. சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு வைத்தியசாலை இயந்திரம் விவகாரம் வதந்தியே! உறுதிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் | Mullithivu Hospital Endokopie Machine Issue

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருக்கின்ற இயந்திரம் ஒன்றினை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை தன்மையினை அறியும் விதமாக நானும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் விஜிந்தனும் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அதற்கு பொறுப்பான வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

அவ்வாறான கோரிக்கை கடிதங்களோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ கிடைக்கவில்லை. அவ்வாறு வருகின்ற போது அதனை நாங்கள் மீள வழங்க முடியாது எனவும் எடுத்து கூறினார்கள்.

அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுவது வதந்தியாகவே பரப்பப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவ்வாறான விடயம் இடம்பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை! நள்ளிரவு முதல் நடைமுறை

அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை! நள்ளிரவு முதல் நடைமுறை

ஆகவே யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலையில் வசதிகள் குறைவாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக வேலை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

தென்னிலங்கைக்கு உபகரணங்கள் கொண்டு போகின்ற சந்தர்ப்பங்கள் வருமாக இருந்தால் நிச்சயம் அதனைத் தடுத்து நிறுத்துவோம். தற்போது வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலையிலே குறைந்தளவு வைத்தியர்களுடன் வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றது.

மக்களும் சென்று பயன்பெற்று வருகின்ற சூழ்நிலையிலே இவ்வாறான இயந்திரங்களை கொண்டு செல்வதாக இருந்தால் அனுமதிக்க முடியாது. குறிப்பாக முல்லைத்தீவிலே போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற வகையில் முக்கிய கவனம் செலுத்துவோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம்! எழுந்துள்ள குற்றச்சாட்டு

அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம்! எழுந்துள்ள குற்றச்சாட்டு

 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US