கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் கோவிட்டினால் மரணம்
கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் ரங்கஜீவ ஜயசிங்க கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி கடந்த ஒரு மாத காலமாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரங்கஜீவ, கடந்த வாரம் கோமா நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ரங்கஜீவ ஜயசிங்க கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
