முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது மற்றொரு முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் தொடராக மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (21.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து உடையார்கட்டு பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வள்ளிபுனம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த முச்சக்கரவண்டியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி வண்டி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் இரண்டு முச்சக்கர வண்டிகளையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam