முல்லைத்தீவில் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி முதியவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடங்கியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு உண்ணாப்பிலவு மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துணுக்காய் வலயத்தினை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று வரை 2008 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
