முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம்! (Video)
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டு சம்பவத்தின் போது சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியால் வெடி வைத்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது 22 அகவையுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக
நபர்கள் இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து
வருவதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்று (11) கிளிநொச்சி தடயவியல்
பொலிஸார் வரவழைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடையங்கள் என்பனவற்றை
விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
