முல்லைத்தீவில் சாதாரண பரீட்சையில் சித்தி பெற்றுள்ள மாணவர்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 57 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கனகையா மதியழகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபட்டிருக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் 107 மாணவர்கள் க.பொ.த சாதரண பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
சிறந்த சித்தி
அதில் ஒரு மாணவர் 9 ஏ சித்திகளையும், மூன்று மாணவர்கள் 8 ஏ, பீ சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8ஏ, பீ சித்திகளையும் பெற்றுள்ளதோடு ஏனைய 51 மாணவர்களும் உயர்தரத்திற்கு தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து தசாப்த காலம் ஆகியுள்ள நிலையில் குறித்த மாவட்டம் வறுமைக்குட்பட்ட மாவட்டமாக காணப்படுகின்ற போதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 7 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த கிராமம் போரினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் அக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் மிக சிரமத்தின் மத்தியிலும் கல்வி கற்று க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
அதேவேளை, யாழ். வேலனை மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 21 மாணவர்கள் சிறந்த சித்தியினை பெற்றுள்ளனர்.
இதற்கமைய, இரு மாணவர்கள் 9A சித்தியினையும், ஒரு மாணவி 8A ஒரு B சித்தியினையும், ஒரு மாணவன் 8A, C சித்தியினையும் பெற்றுள்ளனர்.
மேலும், 17 மாணவர்கள் சிறந்த சித்திகளையும் பெற்று அனைவரும் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |