அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 1.27 ரூபாய் அதிகரித்து 309.61 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்தின் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று முன்தினம் 308.34 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை
மேலும், இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த மாற்று விகிதங்களுக்கமைய, நேற்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 301.91 ரூபாயாகவும் நேற்று முன்தினம் அதே மதிப்பு 300.84 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 309 ரூபாயை தாண்டியது.
ரூபாவின் பெறுமதி
மேலும், 2024ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதியின் பின்னர் ஒரு டொலருக்கு பதிவான அதிகபட்ச கொள்முதல் விலையும் நேற்று பதிவானது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்துடன் முடிவடைந்த பத்து மாதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 3.9 சதவீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.