முல்லைத்தீவில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த தொழில் முயற்சியாளர்கள் 8 பேரும், முன்னோடி தொழில் முயற்சியாளர்கள் 5 பேரும் என மொத்தம் 13 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 27 பேருக்கும் ஊக்கச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது வழங்கல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.








