முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
குறித்த அங்கீகாரத்துடன் நேற்றைய தினம் (27) பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவின் ஒரு அங்கமான பொலிஸ் நிலையங்களை 5எஸ் (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் செயற்பாடு நாடுபூராகவும் இடம்பெற்று வருகிறது.
பொலிஸ் நிலையம்
அந்தவகையில், அதன் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தினை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் இறுதியில் மரநடுகை இடம்பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
