முல்லைத்தீவு இளைஞனின் மரணம்: இராணுவத்திற்கு தொடர்பில்லை என அறிவிப்பு!
முல்லைத்தீவு - முத்தையன்கட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே குறிப்பிட்டுள்ளார்.
முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் இன்று (17) மேற்கொண்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருட்டுச் சம்பவம்..
முன்னதாகவும், இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் அறியமுடிந்துள்ளது.
அதேவேளை, உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை. எனவே, பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



