முல்லைத்தீவு அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த உற்சவமானது, நேற்று (23) காலை முதல் இன்று (24) அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தூக்குக்காவடி, காவடி, பால்செம்பு, கற்ப்பூரச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செய்து கொண்டதோடு அர்ச்சனை செய்து பொங்கல் பொங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகள்
இதேவேளை, நேற்று இரவு எம்பெருமானுக்கு வசந்த மண்டப பூஜைகள் சிறப்பாக இடம்பெற்று எம்பெருமான் உள்வீதி வலம் வந்து முத்து சப்பரத்தில் வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் மாணவர்களது கலைநிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
செய்தி - தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |