சிறப்பாக இடம்பெற்ற வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் கடந்த 22.4.2024 ஆரம்பமாகி 9.27 முதல் 10.27 வரை உள்ள சுப வேளையில் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலயமானது மிக அழகான முறையிலே புனராவர்த்தனம் செய்யப்பட்டு கடந்த 18.4.2024 அன்று கர்மாரம்பம் இடம்பெற்று கிரிகைகள் இடம்பெற்று 20 ஆம் 21 ஆம் திகதிகளில் எண்ணைக்காப்பு சாத்துகின்ற வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 22.4 .2024 நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
செய்தி - தவசீலன்










பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
