குருந்தூர்மலை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி உறுதி
"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலையில் நேற்று முன்தினம் (14.07.2023) வழிபடச் சென்ற தமிழ் மக்களுக்கு பிக்குகள், சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.
தீர்வு காண்பது எமது கடமை
இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.
குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்தநிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடித் தீர்வு பெற்றுக்கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
