முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகல் குறித்து விசாரணை நடத்த ஜே.வி.பி கோரிக்கை
முல்லைத்தீவு நீதவான் ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் வெளிப்படையான உண்மையைக் கண்டறியும் விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவான் கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.
ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்
பாரபட்சமில்லாத தீர்பு
நீதிபதியின் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை சிந்திக்கவேண்டியுள்ளது.
ஒரு நீதிவான் அரசாங்கத்திற்கு எதிராக பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலையாகும்.
எனவே அதன் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.