போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிக்கான நிதி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் வாழ்வாதாரத்திற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிதி வழங்கும் நிகழ்வு மாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுறவினை வளப்படுத்தும் நோக்கில் தமிழ் டயஸ்போரா நிதி உதவியில் வி.பி.பவுண்டேசன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் உள்ள அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிக்கான நிதி வழங்கும் நடவடிக்கை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதர முயற்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் 12 இலட்சம் ரூபா நிதி சுழற்சிமுறையில் மக்களிடையே வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்வதற்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு கிராமங்களில் கூட்டுறவு அங்கத்தவர்களுக்கு வி.பி.பவுண்டேசன் ஊடாக கிராம மக்கள் அபிவிருத்தி அறக்கட்டளை ஊடாக ஒரு பயனாளிக்கு தலா 50 ஆயிரம் ரூபாபடி மாங்குளம் பிரதேசத்தினை சேர்ந்த 24 பயனாளிகளின் வாழ்வாதாரத்திற்கா நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் டயஸ்போரா கூட்டுறவாளர்களின் நிதி சட்டபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,மற்றும் சுயதொழில் ஆகியவற்றுக்காக இந்த நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,பெண்கள் அமைப்பின் தலைவர்கள் வி.பி.பவுண்டேசன் முல்லைத்தீவுமாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன் வைப்பிலிடப்பட்ட பணபுத்தகமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.














