சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்ற யுவதியின் வீட்டிற்கு விரைந்த முக்கியஸ்தர்கள்! (Photos)
பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
இவர்கள் யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு நேற்று (25) சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ம் திகதி அன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இந் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்ட முகாமையாளர் ஹமினி கொஸ்தா யுவதியின் வீட்டிற்கு சென்று யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும், அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் யுவதியின் தேவைகளைபூர்த்தி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.



வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan