வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் நீர் மேவி பாய்கின்றது : போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் வெள்ளநீர் வீதியை மேவி பாய்ந்து வருகின்றமையால், குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவதானத்துடன் செயற்படுங்கள்
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக வட்டுவாகல் பால வீதியின் பல பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தற்போது நான்கு இடங்களில் நீர் வீதியை மேவி பாய்கின்றது.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குறித்த வீதியூடான போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, வட்டுவாகல் பால வீதியூடாகப் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும், நீர்மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் ஆபத்தான முறையில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்வதும் சிறந்தது.







