முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்
ஒட்டுசுட்டான், மானுருவி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிப குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மானுருவி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று (11.10.2023 )இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இரவு வேளை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை குடும்பஸ்தரை யானை தாக்கியுள்ளது.
இதன்போது காயமடைந்த வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மானுரூவி கிராமத்தினை சேர்ந்த 55 வயதையடைய குமாரசாமி அரசகுமார் என்ற வயோதிபரே யானைத்தாக்குதலுக்கு இலக்கியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri