முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்:மக்கள் குற்றச்சாட்டு(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கம் பொலிஸாருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மற்றும் பொதுமக்களுடனான விசேட கலந்துரையாடாலாக இது இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமுத்திர ஜீவாவின் ஒழுங்குபடுத்தலில் குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள், பாடசாலை மாணவர்களின் கற்றல் இடைவிலகல் மற்றும் போதைவஸ்து பாவனையின் அதிகரிப்புக்களும் அதன் தாக்கங்களும் ,அதனூடு உருவாகும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றியும் குறித்த கலந்துரையாடலில் மக்களால் கருத்துரைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றியும் பிரதேச பொலிஸார் அசண்டையீனமாக இருப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் அசண்டையீனம்
மக்காளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் சம்பவங்கள் தொடர்பில் தான் கூடிய கவனம் எடுப்பதாகவும் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு வாரத்துக்குள் தன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ,மாவட்ட பிரதேச பொலிஸ்
பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் ,பொலிஸ்
குழு உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
