கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் (Photos)
முல்லைத்தீவு நகரில் தாங்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாறுகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் இன்று(16) காலை முல்லைத்தீவு நகரப் பகுதியில் உள்ள புனித இராஜப்பர் ஆலயத்துக்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டத்தில் தமக்கு தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும், மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும், இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்,3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும், சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்ய வேண்டும் மற்றும் ஒயிலின் விலை குறைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை கடற்தொழிலாளர் முன்வைத்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் ஒளிபாய்ச்சி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது |
சுமார் பத்து மீன்பிடி படகுகளை உழவு இயந்திங்களில் ஏற்றி,’’ வேண்டும் வேண்டும்
மண்ணெண்ணெய் வேண்டும், தடை செய் தடை செய் சட்டவிரோத தொழிலை தடை செய், நிறுத்து
நிறுத்து இந்திய இழுவைப்படகின் அத்துமீறலை நிறுத்து உள்ளிட்ட கோஷங்களை
எழுப்பியவாறு சுமார் ஆயிரம் கடற்தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கோரிக்கைகள் அடங்கிய மகனு
பேரணியாக சென்ற கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகனுவை கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பதற்காக கையளிக்கப்பட்ட குறித்த மகனுவையும், தங்களது குறிப்புக்களையும் உள்ளடக்கி உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கடற்தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி: வருணன்
புத்தளம்
புத்தளம் - கற்பிட்டி மீணவர்கள் இன்று மண்ணெண்ணையைப் பெற்றுத்தருமாறு கோரி கற்பிட்டி பாலக்குடா சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறுக்கோரி கோஷங்களை எழுப்பியவாறும்,பதாதைகளை ஏந்தியவாறும் மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாமல் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகள் - அஸார்தீன்



